தல அஜித் மிகச்சிறந்த மனிதர்!!! உண்மையை வெளியிட்ட தீவிர ரசிகை !!!!!
தல அஜித்திற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.மேலும் அவர் பல பொது சேவைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் பல மக்களுக்கு அவர் செய்யும் உதவியை அவர் வெளியே சொல்லி விளம்பரப்படுத்துவதில்லை.
இந்நிலையில் அஜித்தின் ‘ விஸ்வாசம் ‘ படம் கடந்த ஜனவரி 10 ந் தேதி வியாழக்கிழமை அன்று திரைக்கு வந்தது. இதனை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடிவருகிறார்கள்.
மேலும் இந்த படத்தை பார்த்து பல ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தை முதல் நாளில் இரண்டாம் காட்சியை திருநங்கை ஒருவர் பார்த்துள்ளார். மேலும் அவர் ‘ விஸ்வாசம் ‘ படத்தை பற்றிய கருத்துக்களையும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் இந்த படம் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள். தல அஜித் மிகவும் நல்ல மனிதர் மற்றும் அனைவருக்கும் உதவி செய்யும் குணம் உடையவர். மும்பையில் ‘ ஆரம்பம் ‘ படம் ஷூட்டிங்கின் போது தல அஜித் வந்திருந்தார். அவரை நாங்கள் சந்தித்த போது எங்களுக்கு மும்பையில் ரூ 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்தார் என்று கூறியுள்ளார்.