எம்.ஜி.ஆர் நடித்த எத்தனையோ படங்கள் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி இருக்கிறது. அதில் ஒரு திரைப்படம் தான் இயக்குனர் மு. ஆ.திருமுகம் இயக்கத்தில் கடந்த 1956 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “தாய்க்குப்பின் தாரம்”. இந்த திரைப்படத்தில் நடிகர் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிகை பி. பானுமதி நடித்திருந்தார். டி.எஸ்.பாலையா, பி.கண்ணாம்பா, சாண்டோ, காக்கா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
முதலில் இந்த திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகை பி. பானுமதி தேர்வு செய்யப்படவில்லையாம். படத்தின் கதையை எழுதிவிட்டு இயக்குனர் எம்ஜிஆர் இடம் படத்தில் ஹீரோயினாக யாரை போடலாம் என கேட்டாராம். உடனடியாக எம்ஜிஆர் யோசித்து விட்டு பானுமதியை போடுவோம் அவர் நல்ல நடிகை சுறுசுறுப்பாக இருப்பார் அவர் இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று எனக்கு தோணுகிறது என கூறினாராம்.
அந்த சமயம் நடிகை பானுமதியும் பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்தாராம். பிறகு எம்ஜிஆர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் அவருக்கு இந்த திரைப்படம் சினிமா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். இந்த திரைப்படத்திற்கு முன்பு நடிகை பானுமதி சில படங்களில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.
ஆனால் இந்த தாய்க்குப்பின் தாரம் படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பை மிகப்பெரியது என்றே.சொல்லவேண்டும். குறிப்பாக இந்த படத்திற்கு பிறகு தான் பானுமதி ” ரம்பையின் காதல்,மக்களை பெற்ற மகராசி, மனமகன் தெய்வம்,ராணி லலிதாங்கி,நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இப்படியான தொடர்ச்சியாக பல படங்களில் அவர் நடிக்க காரணம் எம்ஜிஆர் தன்னுடைய “தாய்க்குப்பின் தாரம்” படத்தில் பானுமதியை தேர்வு செய்ததுதான் . இப்படி சில படங்களிலும் பானுமதியை தேர்வு செய்து பானுமதிக்கு நடிகர் எம் ஜி ஆர் வாய்ப்புகளையும் வழங்கி உள்ளார். இதனால் பானுமதி உயிரோடு இருந்த சமயத்தில் எல்லா பேட்டிகளிலும் எம்ஜிஆரை பற்றி பெருமையாக பேசுவது உண்டு.
குறிப்பாக ஒரு பேட்டியில் கூட எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்கியவர் நடிகர் எம்.ஜி.ஆர் தான். அவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர். ஒரு மனிதருக்கு எப்படி எந்த வகையில் மரியாதை கொடுக்கவேண்டும் என்பதை நீங்கள் அவரிடம் இருந்து கற்று கொள்ளலாம் என மிகவும் பாராட்டி பேசி இருந்தார்.
மேலும், கடந்த 1956 ஆம் ஆண்டு இதே நாளில் (செப்டம்பர் 21) -ஆம் தேதி தான் “தாய்க்குப்பின் தாரம்” திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 63-ஆண்டுகள் ஆகிறது. 63 ஆண்டுகளை கடந்தும் இந்த திரைப்படத்தை இப்போது பார்த்தால் கூட நமக்கு பிடிக்கும் அந்த அளவிற்கு நல்ல படத்தை இயக்குனர் மு. ஆ.திருமுகம் கொடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படம் வெளியாகி அந்த சமயமே மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அது மட்டுமின்றி படத்தில் நடிக்க நடிகை பானுமதிக்கு எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்து இந்த படத்தின் மூலம் அவருக்கும் மார்க்கெட் உயர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…