வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்களா.? உண்மையை உடைத்த உதயநிதி…

Published by
பால முருகன்

விஜயின் “வாரிசு” திரைப்படமும், அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

Varisu Vs Thunivu
Varisu Vs Thunivu [Image Source: Twitter ]

இதில், துணிவு  துணை திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகத்தில் வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே “துணிவு” திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிகம் திரையரங்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

Varisu Vs Thunivu [Image Source: Twitter ]

மேலும் துணிவுடன் விஜயின் ‘வாரிசு’ திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் இரண்டு திரைப்படங்களில் எந்த படத்திற்கு அதிகம் திரையரங்குகள் தமிழகத்தில் கிடைக்கும் எனவும், ஒரு சிலர் துணைப் படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் தமிழகத்தில் கிடைக்கும் என தெரிவித்திருந்தனர்.

இதையும் படியுங்களேன்- அண்ணனுக்கு முத்தம் கொடு…. ராபர்ட் மாஸ்டர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!

Udhayanidhi Stalin [Image Source: Twitter ]

இதற்கு உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” துணிவு – வாரிசு இரண்டு படங்களுக்கு பாதி – பாதி திரையரங்குகள் கொடுக்கப்படும். இதற்கு  முன்பே இதுபோன்ற பேட்ட -விஸ்வாசம் ஆகிய இருபடங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை தான் பெற்றிருந்தது.
இரண்டு படமும் வெற்றிபெற வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை” என தெரிவித்துள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

16 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

17 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago