துணிவு அட்ராசிட்டிஸ்…டாஸ் போட்டு திரையரங்கை கைப்பற்றிய அஜித் ரசிகர்கள்…!
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் விஜய் – அஜித் படங்கள் ஒரே தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் 2 படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாயுள்ளது.
இரண்டு படங்களுக்கான டிக்கெட்காண முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு படத்திற்கு அதிகாலை 1.00 மணி காட்சியும், விஜய்யின் வாரிசு படத்திற்கு அதிகாலை 4.00 மணிக்கும் முதல் நாள் முதல்காட்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்களேன் – அடேங்கப்பா…’வாரிசு’ படத்திற்கு ராஷ்மிகா வாங்கிய சம்பளம் இவ்வளவா..?
இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், காமெடியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், அந்தமானில் இருக்கும் திரையரங்கு ஒன்றில் டாஸ் போட்டு அஜித் ரசிகர்கள் திரையரங்கை பிடித்துள்ளனர்.
ஆம், அந்த திரையரங்கில் மொத்தமுள்ள 3 ஸ்க்ரீன்கள் இருக்கிறது. முதல் ஸ்கிரீன் துணிவுக்கும், இரண்டாவது ஸ்க்ரீன் வரிசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 3வது ஸ்க்ரீன் யாருக்கு என தியேட்டர் நிர்வாகம் முன்னிலையில் அஜித், விஜய் ரசிகர்கள் டாஸ் போட்டு முடிவு செய்தனர். டாஸில் ‘துணிவு’ வென்றது. அவர்கள் டாஸ் போட்டு திரையரங்கை பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.