வீட்ல கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் தீவிரவாதிகள் – பா.ரஞ்சித் பரபர பேச்சு.!

RamMandir - pa ranjith

நடிகர் அசோக் செல்வன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பா.ரஞ்சித் ராமர் கோயில் திறப்பு குறித்து பேசினார். அப்போது இவர் பேசுகையில், “ரொம்பவும் முக்கியமான நாள் இன்று வீட்டிற்கு சென்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் எல்லாம் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான கால கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்வுகள், இன்னும் 5-10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயத்தை உணர்த்துகிறது. அது போன்ற காலகட்டத்திற்குள் நுழையும் முன்பு, நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத் தனத்தையும், தினமும் சொல்லிக் கொடுக்கப்படும் மதவாதத்தையும் நம்மிடம் இருந்து அழிக்க, கலையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறோம்.

500 ஆண்டுகளுக்கு பின்னால் உள்ள பிரச்னையின் அரசியலை கேள்வி கேட்க வேண்டும். ராமர் கோயில் திறப்புக்கு பின்னாடி இருக்குற மத அரசியலை கவனிக்க வேண்டியுள்ளது  இந்த நாள் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.

அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் பேச்சு!

ஆனால், இந்த நாளில் இருந்து புதிய வரலாறு ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கு இருக்கப் போகிறோம் என்ற யோசனை நமக்கு வேண்டும். ப்ளூ ஸ்டார் என்ற பெயரே அரசியல்தான், அந்த நீல நட்சத்திரம் நம்மை சரியாக வழி நடத்தும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்