நடிகராகவும்,இசையமைப்பாளராகவும், தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இவர் சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது.
இந்த பயங்கரமான விபத்தில் எலும்புகள் முறிந்து அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால், விஜய் ஆண்டனிக்கு இது முதன் முறை ஏற்பட்ட விபத்து இல்லயாம். இதற்கு முன்பே 20 வயது இருக்கும்போதே பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய விஜய் ஆண்டனி ” எனக்கு 20 வயது இருக்கும்போதே பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. இப்போது ஏற்பட்ட விபத்தை போலவே, முகத்தில் தான் எனக்கு அடி விழுந்தது. 5 எலும்புகள் முறிந்தது. பைக்கில் போய் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் என்னுடைய வலது கண் பகுதியில் பயங்கரமான காயம் ஏற்பட்டது.
அந்த விபத்தில் எனக்கு 5 எலும்புகள் முறிந்தது. இப்போது நான் பேசிக்கொண்டு இருப்பதால் அது தெரியாது. இரவு நேரங்களில் வேலை செய்துகொண்டிருக்கும்போது என்னுடைய முகம் மாறும். இந்த விபத்தில் இருந்து தான் என்னை மருத்துவர்கள் பைக் ஓட்டக்கூடாது என்று கூறினார்கள்.
பைக் ஓட்டினால் சில பிரச்சனைகள் வரும் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ளுங்கள், முடிந்தால் கார் வாங்கிக்கொண்டு அதில் பயணம் செய்யுங்கள் என அறிவுத்தினார்கள். ஆனால் என்னிடம் அப்போது வசதி இல்லை பிறகு லோன் போட்டு தான் கார் வாங்கினேன். எனக்கு அந்த விபத்து முடிந்த பிறகு தான் கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணம் வந்தது. அதைபோல், இப்போது நடந்த விபத்தில் இருந்து நான் மிகவும் சுறு சுறுப்பாக இருக்கிறேன்” என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அண்ணா என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…