சினிமா

பத்து கோடி பத்தாது! புது படங்களுக்கு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா?

Published by
பால முருகன்

நடிகைகளில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் நடிகை நயன்தாரா தான். ஏனென்றால், தென்னிந்திய சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க 10 கோடி எந்த நடிகையும் சம்பளமாக வாங்கவில்லை ஆனால், நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 10 கோடி தான் வாங்கி வருகிறாராம். கடைசியாக இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மிக்பெரிய அளவில் வெற்றி அடைந்து வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக நடிகை நயன்தாரா மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இவர் ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்காக சம்பளமாக 9 கோடி முதல் 10 கோடி வரை வாங்கியதாக தகவல்கள் பரவியது.

இதனையடுத்து, பாலிவுட்டில் ஷாருக்கானுக்கே ஜோடியாக நடித்துவிட்டாச்சு சம்பளத்தை உயர்த்துவோம் என்று முடிவெடுத்து இருக்கிறாராம்.  அதன்படி, நயன்தாரா தான் இனிமேல் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 12 கோடி வாங்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம். தன்னை தேடி வரும் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு படத்தில் நடிக்க சம்பளமாக 12 கோடி கேட்கிறாராம்.

சம்பளத்தை உயர்த்தியதோடு மட்டுமின்றி தற்போது அவர் நடித்து வரும் ‘மண்ணாங்கட்டி’  படத்தின் படப்பிடிப்பின் போதும் ஒரு சம்பவம் செய்துள்ளாராம்.  அது என்னவென்றால், ‘மண்ணாங்கட்டி’   படம் பழமையான காலத்து கதையை வைத்து எடுக்கப்பட்டு வருகிறதாம். எனவே, படத்தின் படப்பிடிப்பு ஏலக்காய் தோட்டத்தில் எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார்களாம்.

அதன் காரணமாக கொடைக்கானல் பகுதியில் உள்ள தாண்டிகுடி என்ற இடத்தில ஒரு ஏலக்காய் தோட்டம் இருக்கிறதாம். அங்கு இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தினால் நன்றாக இருக்கும் என்பதால் நயன்தாராவிடம் இதனை பற்றி பேசியிருக்கிறார்களாம். ஆனால், நயன்தாரா பூச்சி எல்லாம் அங்கு இருக்கும் என்ற காரணத்தால் தான் நடிக்க வரவில்லை என்று கூறிவிட்டாராம்.

 இதனால், அதைப்போல ஒரு பிரமாண்ட ஷெட்டை படக்குழு சென்னையில் அமைத்து வருகிறதாம். அதுவும் பல கோடிகள் செலவு செய்து அமைத்து வருகிறதாம். நயன்தாரா அந்த பகுதிக்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டால் கோடிகளை செலவு செய்யவேண்டிய அவசியமே இல்லை ஆனால், நயன்தாரா இப்படி செய்துள்ளது தயாரிப்பு நிறுவனத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

3 minutes ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

1 hour ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

2 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

2 hours ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

3 hours ago