பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்! கண்ணீரில் தெலுங்கு திரையுகம்…
பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் (83) இதயம் தொடர்பான நோய்களால் அவதிப்பட்ட வந்த அவர், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
1975ல் வெளியான “நாளை நமதே” படத்தில் எம்ஜிஆர் தம்பியாக நடித்தார். இதன்பின், சந்திரமோகனை எம்ஜிஆர் தம்பி என்று தான் தமிழ் திரைத்துறையினர் அழைத்தனர். தமிழில் டைம், சகுனி உட்பட தென்னிந்திய மொழிகளில் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சந்திரமோகனுக்கு ஜலந்தரா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நாளை தீபாவளி என்பதால், அதற்கு அடுத்த நாளான (திங்கள்கிழமை) ஹைதராபாத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவரது திடீர் மறைவால் தெலுங்கு திரையுலகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது, மேலும் திரைபிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உயிருள்ள வரை உஷா…டி.ஆர் பட நடிகர் கங்கா காலமானார்!
அந்த வகையில், ‘ஆர்ஆர்ஆர்’ பட நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது சமூக வலைத்தளங்கில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பதிவில், “பல ஆண்டுகளாக திரைப்படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து தனக்கென தனி அங்கீகாரம் பெற்ற சந்திரமோகன் காருவின் அகால மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ఎన్నో దశాబ్దాలుగా చలనచిత్రాల్లో విభిన్నమైన పాత్రలు పొషించి, తనకంటూ ప్రత్యేక గుర్తింపుని సంపాదించుకున్న చంద్రమోహన్ గారు అకాల మరణం చెందడం చాలా బాధాకరం.
వారి కుటుంబానికి నా ప్రగాఢ సానుభూతిని తెలియజేస్తూ ఆయన ఆత్మకి శాంతి చేకూరాలని ప్రార్దిస్తున్నాను.
— Jr NTR (@tarak9999) November 11, 2023
சந்திர மோகன்
தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ள சந்திர மோகன், ஒரு பிலிம்பேர் விருதும் இரண்டு நந்தி விருதுகளும் பெற்றுள்ளார். ‘ரங்குலா ரத்னம்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார். இவர், அடுத்தடுத்த பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களில் நடித்து, தனது நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளார்.