‘உங்க அப்பா பெயர் சொல்லுங்க’…நெட்டிசனுக்கு நெத்தியடி கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை : மகன்கள் இணைந்து மிரட்டும் கோட் படம் என நெட்டிசன் ஒருவர் விமர்சித்த நிலையில், அதற்கு நெத்தியடி கொடுத்த வெங்கட் பிரபுவின் பதிவு வைரலாகி வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய படங்களை எந்த அளவுக்கு ஜாலியாக எடுக்கிறாரோ நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் ஜாலியாக இருப்பார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களோ அல்லது நெட்டிசன் கள் எதாவது ட்ரோல் செய்து பதிவிட்டால் போதும், அதற்கு தன்னுடைய பாணியில் நகைச்சுவையாகப் பதில் அளித்துவிடுவார். அப்படி தான் அவர் தற்போது இயக்கியுள்ள ‘கோட்’ படத்தில் பிரபலங்களின் மகன்கள் நடித்திருப்பதால், அதாவது நெப்போட்டிசத்தை முன்னிறுத்தி படம் எடுத்திருக்கிறார்கள் என ஜாடைமாடையாக பதிவிட்டு இருந்தார்.
அதில், அந்த நெட்டிசன் கூறியதாவது ” எஸ்ஏசி பையன் (விஜய்), தியாகராஜன் பையன் (பிரசாந்த்), சுந்தரம் மாஸ்டர் பையன் (பிரபுதேவா), மலேசியா வாசுதேவன் பையன் (யுகேந்திரன்), இளையராஜா பையன் (யுவன்), கங்கை அமரன் பசங்க ( வெங்கட் பிரபு,பிரேம் ஜி), கல்பாத்தி அகோரம் பொன்னு (அர்ச்சனா கல்பாத்தி) ஆகியோர் இணைந்து மிரட்டும் கோட்” என பதிவிட்டு இருந்தார்.
மேலும், கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் வெங்கட் பிரபு பிஸியாக இருக்கிறார். படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் தமிழ் நாடு, பெங்களூர், எனப் பல இடங்களில் தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025