‘அசைந்தால் சாவு நிச்சயம்’ ..! வெளியானது டீசர் .. வருகிறது ஸ்க்விட் கேம் 2 !

Squid Game -2

ஸ்க்விட் கேம் : கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதித்தில் உலகம் முழுவதும் இந்த ஸ்க்விட் கேம் வெளியாகி பெரிதளவு அந்த வெப் சீரிஸ் வரவேற்கப்பட்டது. மேலும், அந்த நேரம் உலகம் முழுவதும் கொரோனா முடக்கத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தருணம் என்பதால் அதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைக்க ஒரு காரணமாகவும் அமைந்தது என்றே கூறலாம்.

மேலும், அதன்படி அந்த ஸ்க்விட் கேம் வெப் சீரியஸின் கதைக்களமும் அமைந்திருக்கும். இந்த வெப் சீரிஸுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் காரணமாக இந்த வெப் சீரிஸின் 2-ஆம் பாகம் எப்போது வெளியாகும் என கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இந்நிலையில், நேற்றஸ்க்விட் கேம் தயாரிப்பு நிறுவனம் இதற்கான 2-ஆம் பாகத்தின் டீசரை வெளியிட்டு அது நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதியையும் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஸ்க்விட் கேம் வெப் சீரியஸின் 2-ஆம் பாகம் உலகம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதனால் வெப் சீரியஸ் காணும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.மேலும், போன பாகத்தை எப்படி போட்டிகள் நடைபெறுமா அதை போல வெளியான இந்த தேதி அறிவிப்பு டீஸரிலும் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறவாரு காட்டுகின்றனர்.

மேலும், இந்த டீஸரின் இறுதியில் ஸ்க்விட் கேம் வெப் சீரியஸின் கடைசி மற்றும் 3-ஆம் பாகம் வரும் 2025-இல் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். மேலும், சீசன் 1 முடிவில் பழிவாங்குவதாக சபதம் செய்த சியோங் கி-ஹன் திரும்பி வந்து மீண்டும் கேமில் இணைகிறார். பழிவாங்குவதில் அவர் வெற்றி பெறுவாரா? என்பது இந்த 2-ஆம் பாகத்தின் கதையாக இருக்கலாம் என ஸ்க்விட் கேம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்