கேப்டன் விஜயகாந்துடன் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சந்திப்பு!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியினர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.