மக்களுக்கு டாஸ்க் கொடுக்கும் பார்த்திபன்!
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் மக்களை உற்சாகப்படுத்தும் பல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்,தன் முகநூல் பக்கத்தில், மூன்று படங்களை வெளியிட்டுள்ளார். அதில்,’மூன்றையும் இணைத்தால் ஒரு வார்த்தை வரும். அதை கண்டுபிடியுங்கள்.’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தற்போதைய ஒய்வு நேரத்தில், மக்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்க நினைத்தேன். அதன் விளைவு தான் இந்த பதிவு.’ என கூறியுள்ளார்.