Tanya Ravichandran
நடிகை தன்யா ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது ரசிகர் ஒருவர் தன்னிடம் கேட்ட வித்தியாசமான கேள்வி பற்றிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல்லே வெள்ளையத்தேவா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் கிடைத்த வரவேற்பு காரணமாக தெலுங்கிலும் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது.
குறிப்பாக காட் ஃபாதர் படத்தில் கூட நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராசாவதி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 10 திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில், படத்தில் நடித்த பிரபலங்கள் எல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்,
அப்படி தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது ரசிகர் ஒருவர் அவரிடம் கேட்ட கேள்விக்கு மிகவும் அதிர்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். பேட்டியில் பேசிய நடிகை தன்யா ரவிச்சந்திரன் ” ஒரு முறை ஒரு ரசிகர் ஒருவர் என்னிடம் என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்ள முடியுமா? அக்கா என்று “ கேட்டார். அந்த கேள்வியை கேட்டவுடன் எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டது.
அந்த சமயம் எப்படி அவர் கேட்டதற்கு பதில் சொல்லவேண்டும் எப்படி முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒன்றுமே புரியவில்லை. அக்கா என்று சொல்லிவிட்டு அவர் அப்படி கேட்டது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் இந்த சம்பவத்தை மட்டும் மறக்கவே மாட்டேன். இதுபோன்ற வேடிக்கையான சம்பவங்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது” எனவும் தன்யா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்ய…
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…