தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக தமிழ்ராக்கர்சிடம் கெஞ்சும் இயக்குனர் விக்னேஷ்சிவன்!
இதை எங்களுக்குச் செய்யாதீர்கள் என தமிழ் ராக்கர்ஸுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
திரைப்படங்களை சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸுக்கு தானா சேர்ந்த கூட்டத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வேண்டுகோளில்,”தமிழ் ராக்கர்ஸ் குழுவினரே! உங்களுக்கு இதயம் இருந்தால் அதை தயைகூர்ந்து பயன்படுத்துங்கள்.நாங்கள் இந்த நாளுக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம்!
வரிப் பிரச்சினைகள், சினிமா துறை பிரச்சினைகளைத் தாண்டி படங்களை ரிலீஸ் செய்திருக்கிறோம்!எனவே இதை எங்களுக்குச் செய்யாதீர்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்த் திரைப்படங்கள் வெளியான மறுநாளே அதை இணையத்தில் வெளியிட்டு திரைத்துறைக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது தமிழ்ராக்கர்ஸ் குழு. இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸ் ஆன நாளிலேயே அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.