லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். எனவே, மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள லியோ படத்திற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அக்.19ம் தேதி வெளியாகவுள்ள லியோ” படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வரும் 19ம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20, 21, 22, 23, 24 ஆகிய தினங்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 19 முதல் 24ம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட திரையரங்குகளில் ஒருநாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று…
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…