BiggBoss நிகழ்ச்சியில் கடந்த வாரம் வையாபுரி அவர்கள் வெளியேற்றப்பட்டார். பொதுவாக எலிமினேட் ஆகுபவர்கள் கமல்ஹாசனுடன் கலந்துரையாடிவிட்டு தான் செல்வார்கள். அப்படி வையாபுரியும் கமல்ஹாசனுடன் சிறுது நேரம் கலந்துரையாடினார். அப்போது வையாபுரி, அண்மையில் தன் குடும்பத்துடன் ரஜினி அவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது நான் உங்களுடன் நடித்த படங்களை பற்றி அவர் பேசினார் என்று கூறினார். உடனே கமல்ஹாசன் ரஜினி என்னுடைய படங்களை பார்த்தது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார்.
BiggBoss நிகழ்ச்சியில் இதுவரை சண்டை, விளையாட்டு, மகிழ்ச்சியான தருணங்கள் என நிறைய பார்த்திருப்போம். ஆனால் 100 நாட்கள் நெருங்க நெருங்க பயங்கரமான சண்டைகள் வரும் என்பது போல் தெரிகிறது. அதன் முதல் கட்டமாக புதிதாக வந்த புரொமோவில் சுஜா மற்றும் சினேகனிடையே சண்டை ஏற்படுகிறது.சுஜா என்னை தொடாதீர்கள் என்று கூற, அதற்கு சினேகன் பிறகு எப்படி விளையாடுவது என்பன போல ஆரவ் மற்றும் பிந்து மாதவியிடம் கூறுகிறார். ஆரவ்வும் விளையாடும் போது திடீரென்று வார்த்தையை விடுகிறார்கள் என்கிறார்.