TNAwards2015 தமிழக அரசு திரைப்பட விருதுகள் தமிழ் நாடு அரசால் ஆண்டுதோறும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தனிஒருவன், இறுதிச்சுற்று, 36 வயதினிலே, பசங்க 2, ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த நடிகைகான விருது 36 வயதினிலே படத்தில் அருமையாக நடித்த ஜோதிகாவுக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் தனி ஒருவன் படத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், யார் யாருக்கு என்னென்ன விருது என்பதனை விவரமாக பார்க்கலாம்.
சிறந்த படம் என்ற பிரிவுகளில் முதல் பரிசு, தனி ஒருவன் படத்திற்கும் இரண்டாம் பரிசு பசங்க 2 படத்திற்கும், சிறந்த படம் மூன்றாம் பரிசு பிரபா என்ற படத்திற்கும் நான்காவது பரிசாக இறுதிச்சுற்று படத்திற்கும் 5-வது பரிசு 36 வயதினிலே படத்திற்கும் வழங்கப்பட இருக்கிறது.
அதைப்போல, சிறந்த நடிகா் சிறப்புப் பரிசு வை ராஜா வை படத்தில் நடித்த கௌதம் காா்த்திக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த நடிகைகான சிறப்புப் பரிசு இறுதிச்சுற்று படத்திற்காக ரித்திகா சிங்க்கு வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுகள் வழங்கும் விழாவானது சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நாளை அதாவது புதன்கிழமை (மாா்ச் 6) மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் செய்தி துறை அமைச்சர் மு பே சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் , இந்து சமயம் மற்றும் அறநிலை துறை அமைச்சர் கே பி சேகர் பாபு ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…