வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
வேட்டையன் திரைப்படத்தை நாளை ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் TJ.ஞானவேல் இயக்கியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் நாளை (அக்டோபர் 10ஆம் தேதி) உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழக அரசு தற்போது வழங்கி இருக்கிறது.
அதன்படி, நாளை ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை என மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிக் கண்ட கோட் மற்றும் ராயன் திரைப்படத்திற்கும் இப்படி சிறப்பு காட்சி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் உற்சாகத்த்தில் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், கிஷோர், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், ரோகினி, துஷாரா விஜயன், வி.ஜே.ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். சிறிய இடைவெளைக்கு பின், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூலி படப்பிடிப்பிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர் ஆகியோரும் நடித்துள்ளனர்.