பிரம்மாண்ட மேக்கிங்…பிசிறு தட்டாமல் கவனம் செலுத்தும் தமிழ் ஹீரோக்கள்.!

TAMIL BAN INDIAN MOVIE

தற்போதைய தமிழ் சினிமாவில் வாரம் 4 முதல் 5 திரைப்படங்களாவது வெள்ளி திரையில் வெளியாகிறது. இந்த நிலையில், சில படங்கள் ஒரு ஆண்டுகளாக உருவாகி வருகிறது. பான் இந்திய லெவில் உருவாகி வரும் சில தமிழ் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களுக்கு கடும் உழைப்புகளை கொடுத்து வருகிறார்கள்.

அந்த மாதிரியான திரைப்படங்கள் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கி உள்ளது. தமிழ் சினிமா இப்போது இந்திய அளவில் அல்ல, உலகளவில் வெற்றிபெற அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றே கூறலாம்.

அதற்காக, படங்களின் மேக்கிங்கில் ஹீரோக்களும் அதிகம் உழைத்து வருகின்றனர். தற்பொழுது அதுபோன்ற சில படங்கள் பற்றி பார்க்க போகிறோம். அதன் வரிசையில், உலக நாயகனின் ‘இந்தியன் 2’, சூர்யாவின் ‘கங்குவா’, சியான் விக்ரமின் ‘தங்கலான்’ மற்றும் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஆகியவை அடங்கும்.

சிம்புவை வைத்து சூப்பரா பண்ணுங்க! இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

நம் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களின் இப்படிப்பட்ட பிரம்மாண்ட படைப்புகள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நான்கு திரைப்படங்களில் மேக்கிங் வீடியோக்களும் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகமாக்கியது என்றே சொல்லலாம்.

மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்பட, தமிழ் சினிமாவில் இன்னும் வெளியாகாமல் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படங்களில் ஒன்று இந்த படத்தினுடைய முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவில் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு பிரமாண்டமாக அமைந்திருந்தது. அத்துடன் அனிருத் பின்னணி இசையும் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் பார்ப்பதற்கு மெய் சிலிர்க்க வைத்தது.

கங்குவா

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மற்றும் சூர்யாவின் வசனம் காண்போரை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தின் சண்டை காட்சிகளுக்கு படக்குழு மெனக்கெட்டு வருகிறது. மேக்கிங் வீடியோவில் அந்த அளவுக்கு பிரமாண்டமாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தங்கலான்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தங்கலான்’. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முன்னதாக, மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய படக்குழு, சமீபத்தில் டீசரையும் வெளியிட்டது. டீசரை வைத்து பார்க்கையில் வித்தியாசமான கதைக்களத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள காரணத்தால் கண்டிப்பாக இந்த படமும் கண்டிப்பாக பேசப்படும் படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

கேப்டன் மில்லர்

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தினை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். அண்மையில், படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், சமீபத்தில் படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ பாடலை படக்குழு வெளியிட்டது.

இந்த திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்