ஞானவேல் ராஜா : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் பெரிய பெரிய படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக சூர்யாவை வைத்து கங்குவா, விக்ரம் வைத்து தங்கலான், கார்த்தியை வைத்து வா வாத்தியார் என படங்களை தயாரித்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே, பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் பற்றி பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த சர்ச்சை விவகாரம் அப்டியே ஓய்ந்தது.
அதனை தொடர்ந்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தமிழ் ஹீரோஸ் பான் இந்தியா ரேஞ்சிக்கு இன்னும் வரல என்று பேசி அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ” இன்றயை காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை எடுத்துக்கொண்டோம் என்றால் பான் இந்தியா ஸ்டார்ஸ் என்றால் பிரபாஸ், யாஷ், அல்லு அர்ஜுன், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
ரிஷப் ஷெட்டி அதற்கு பக்கத்தில் வந்துவிட்டார். காந்தாரா 2 படம் வெளியாகும் போது கண்டிப்பாக அவர் முழுவதுமாக பான் இந்தியா ஹீரோவாக மாறிவிடுவார். இந்த விளையாட்டிற்குள் நம்மளுடைய தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோக்கள் யாரும் வரவில்லை. நான் ஒரு படத்தில் நடிக்க 4 பேர் பம்பாயில் இருந்து எடுத்து என்னுடைய படத்தில் நடிக்க வைக்கிறேன் என்றால் அது பான் இந்தியா படம் என்று ஆகிவிடாது.
என்னுடைய படத்திலே எடுத்துவிட்டீர்கள் என்றால் அதாவது கங்குவா படத்தை சொல்கிறேன் படத்தில் பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் இருப்பதால் பான் இந்தியா படம் இல்லை. படத்தின் கதை அவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணத்துக்கு கேஜிஎப் படத்தை கூட சொல்லலாம். கேஜிஎப் படம் அந்த அளவுக்கு ஹிட் ஆக கதை தான் காரணம்” எனவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சரியாகத்தான் சொல்கிறார் என்றும், மேலும் சில என்னது தமிழ் ஹீரோஸ் பான் இந்தியா ரேஞ்சிக்கு இன்னும் வரல? எனவும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ரஜினி ரசிகர்கள் பலரும் சிவாஜி, எந்திரன்,2.0 ஆகிய படங்களால் பான் இந்தியா தமிழில் தான் அறிமுகம் ஆச்சு என கூறி வருகிறார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…