நாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்.?
தயாரிப்பாளர்கள் சங்கம் : நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடிப்பெரும் செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க கண்டனத்திற்காக விவாதங்கள் எழும் என கூறப்படுகிறது.
இதை பொறுத்து தான் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் முன்னதாக நடைபெற வாய்ப்பு உள்ளதா என்பது உறுதியாகும். வழக்கமாக மாதத்தின் இரண்டாவது ஞாயிறு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ( TFPC) சென்னையில் ஒரு கூட்டம் நடத்தி, நவம்பர் 1 ஆம் தேதி வரை திரைப்படம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவது குறித்து ஆலோசித்தது.
அதில், தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு படங்களை முடித்துக்கொடுக்காமல், மேலும் புதிய தயாரிப்பாளர்களை அணுகி வருகிறார். எனவே, புதிய தயாரிப்பாளர்கள் தனுஷை சந்திக்கும் முன், தயாரிப்பாளர் சங்கத்தை அணுகவேண்டும் என்றும் கேட்க்கொண்டனர்.
இதனையடுத்து, தனுஷுக்கு எதிரான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் (டிஎஃப்பிசி) முடிவுக்கு நாசர் மற்றும் கார்த்தி தலைமையிலான நடிகர் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்தது. நடிகர் சங்கத்தின் இந்தக் கண்டனங்களுக்கு TFPC பதிலளிக்கவில்லை.