தமிழ் இயக்குநர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை – இளையராஜா.!

Default Image

கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சில்ட்ரன் ஆஃப் ஹெவன்”. இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 1997 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இந்த படம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

ஆங்கிலத்தில் வெற்றி பெற்ற  இந்த படம் தமிழில் “அக்கா குருவி” என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சாமி என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.

இந்த படத்தின் இசைவெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இளையராஜா ” உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படி “சில்ட் ரன் ஆஃப் ஹெவன்” படம் பார்த்த போது மிகவும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நமது தமிழ் நாட்டில் ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை.? ஏன் வருவதில்லை.? என எனகுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. உயர்வான சிந்தனை ஒரு கலைஞனுக்கு தோன்றி அவனை அது தாக்கினால் தான், உயர்வான ஒன்றை உருவாக்க முடியும். இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குநர்களிடம் இல்லை.

அதே படத்தை நம்ம இயக்குநர் சாமி நம்ம ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என நம்ம ஊருக்கு தகுந்தவாறு அந்த கதையை மாற்றி, ஒரிஜினல் படத்தை விட சுவாரஸ்யமாக அருமையாக எடுத்திருக்கிறார்.இந்த மாதிரி படங்கள் வெற்றியடைய வேண்டும் அதற்கு வாழ்த்துக்கள் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்