ஆயிரம் கோடி வசூலை தட்டி தூக்க காத்திருக்கும் தமிழ் சினிமா.! டாப் லிஸ்ட் இதோ…!!

கோலிவுட் சினிமாவில் அடுத்தடுத்து எதிர்பார்ப்பில் எகிறியுள்ள படங்கள் பல உள்ளது. அதில் சில படங்கள் 1,000 கோடி வசூல் செய்யும் வகையில் பான் இந்திய அளவிற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அது என்னென்ன படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
1.லியோ
விக்ரம் படத்தை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் மார்க்கெட்டும் தற்பொழுது உயரத்தில் உள்ளது. அதேபோல் விஜய் மார்க்கெட்டை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம்.

எனவே, லியோ திரைப்படம் வெளியானால் கண்டிப்பாக 1,000 கோடி வசூல் செய்யும் என சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
2.ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடைசியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது.

அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ரஜினி நடித்த எந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை எனவே, அதன் காரணமாகவும், ஜெயிலர் படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருவதாலும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. எனவே இந்த திரைப்படமும் அதிக அளவில் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3. இந்தியன் 2
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தான் ‘இந்தியன் 2’. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிப்பு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதால் இரண்டாவது பாகத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே, இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக 1,000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் திரைப்படம் கூட உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. மேலும், இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.
4.கங்குவா
ஒரு படத்தின் தலைப்பு வெளியவதற்கு முன்பே பலத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திரைப்படம் என்றால் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படம் தான். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

படத்தின் சிறிய டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது என்றே கூறலாம். எனவே, படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 10 மொழிகளில் வெளியாகிறது என்பதால் 1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் மில்லர்

தனுஷ் நடிப்பில் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர் இந்த திரைப்படம் தான் தனுஷின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமும் கூட. இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது எனவே இந்த படம் வசூல் ரீதியாக 300 இருந்து 400 கோடி வரை வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அயலான்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் ‘அயலான்’ 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் மீதும் கோலிவுட் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பில் உள்ளதால் 200 கோடியில் வரை இந்த படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் கேரியரில் இந்த திரைப்படம் தான் அதிகபட்ச பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது