தமிழ் தெரிந்தால் சம்பள விவகாரம் தெரிந்து விடும் என தமிழ் தெரிந்த நடிகைகளை நடிக்க வைக்க பயப்படுகின்றனர் என நடிகர் ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார்.
கபடி வீரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு நடிகர் ராதாரவி பேசினார்.அப்போது அவர் பேசுகையில் ” தமிழ் தெரிந்தால் இனிமேல் பட வாய்ப்பு கிடைக்காது. நடிப்பதற்கான சம்பளம் குறைப்பு உள்ளிட்ட விஷயங்களை பேசும் போது அது தமிழ் தெரிந்த , தமிழ் பேசும் நடிகைகளுக்கு தெரிந்துவிடும் என்று தமிழ் நடிகைகளை படங்களில் நடிக்க வைக்க பதயங்குகிறார்கள் என்று நடிகர் ராதாரவி குற்றம் சாட்டினார்.