“தேசிய அரசியலில் இறங்கும் தமிழ் நடிகர்”
சென்னை
தேசிய அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக இந்தியில் படம் எடுக்க முடிவு செய்துள்ளதாக டி.ராஜேந்தர் கூறியிள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரும் 3-ம் தேதியன்று அவரது 64-வது பிறந்த நாளையொட்டி, புதிய, பல நல்ல திட்டங்களையும், செயல்களையும் தொடங்க உள்ளேன்.
எம்ஜிஆர் கூப்பிட்டே நான் கட்சிக்கு செல்லவில்லை. நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் கருணாநிதிதான். கருணநிதி மறைந்துவிட்ட இந்த காலகட்டத்திற்கு பிறகு எனது நிலைப்பாடும் மாறியிருக்கிறது. இனி எனக்கு எந்த இடர்பாடும் இருக்காது. அக்டோபர் 3-ம் தேதி எனக்கு பிறந்த நாள் வருகிறது. அன்றைக்கு எங்களுடைய பொதுக்குழுவை கூட்ட உள்ளேன்.
என் கட்சி சின்ன கட்சியாக இருக்கலாம், சின்னம் கூட இல்லாத கட்சியாக இருக்கலாம், என்னுடைய ஆதரவாளர்களை, அபிமானிகளை திரட்டி, புதிய பாதை, புதிய பரிணாமம், புதிய லட்சியம், என்ற வகையில் எனது கட்சியின் உறுப்பினர் படிவத்தை அன்றைய தினம் வழங்க உள்ளேன். என் கட்சியின் அமைப்புகளை மாற்றி அமைக்க உள்ளேன். சீரமைப்பு செய்ய உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பயணிக்க உள்ளேன். முதல்கட்டமாக கோவை, ஈரோடு என இரண்டு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
என் பிறந்த நாள் அன்று 2 திரைப்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளேன். தமிழகம் மட்டும் அல்லாமல் தேசிய அரசியலிலும் காலூன்ற உள்ளேன். இனியும் தமிழ்நாட்டில் அரசியல் செய்தால் அது சரியாக வராது. அதனால் ஹிந்தி திரைப்படமும் எடுக்க போகிறேன். அதனால் லட்சிய திமுக சார்பில் 3ம் தேதி பொதுக்குழுவை கூட்டி அனைத்தையும் கலந்து விவாதிக்க இருக்கிறேன். லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்க்க போகிறேன் என்று சொல்ல மாட்டேன். லட்சியம் உள்ளவர்களை என் கட்சியில் சேர்த்து கொள்வேன். என கூறினார்.
DINASUVADU