தமிழ் சினிமாவில் கேடி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை தமன்னா. தமிழையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகை இன்று சினிமாதுறையில் நுழைந்து இன்றுடன் 18 வருடங்களை நிறைவு செய்கிறார். இதே தினத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஹிந்தியில் சந்த் சா ரோஷன் செஹ்ரா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தான் அவருக்கு முதல் படம். எனவே, ரசிகர்கள் அனைவரும் தமன்னா நடித்த படங்களில் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்திற்கான படத்தை வைத்து எடிட் செய்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவை அனைத்திற்கும் நன்றி தெரிவித்துள்ள தமன்னா ” டீன் ஏஜ் கனவுகள் முதல் பெரியவர்கள் நனவாகும் வரை… துன்பத்தில் இருக்கும் ஒரு பெண் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் ஒரு மோசமான பவுன்சர் மற்றும் இப்போது ஒரு பயமற்ற பெண் வரை இந்த 18 ஆண்டுகளாக நான் சினிமாவில் வாழ்ந்து இருக்கிறேன்.
என்னுடைய முதல் காதலான சினிமாவில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். இந்த ந்த அற்புதமான நினைவுகளை நினைவுகூர சிறிது நேரம் கிடைத்தது மற்றும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்… இந்த கனவு சவாரியில் எனக்கு மிகவும் ஆதரவாக இருப்பவர்கள். நன்றி மற்றும் நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய தமன்னா தன்னுடைய புது படம் குறித்தும் பேசியுள்ளார். அதில் ” எங்கு அன்யா எனக்கு மிகவும் சிறப்பான பாத்திரம். ஆக்ரி சாச் போன்ற ஒரு கவர்ச்சியான கதையில் ஒரு போலீஸ்காரராக நடிப்பது நிச்சயமாக ஒரு சவாலாக இருந்தது… ஆனால் அதை நான் இரு கரங்களுடன் வரவேற்றேன். ஒவ்வொரு உணர்ச்சியையும் இந்தக் கதாபாத்திரத்தில் செலுத்தி அதற்கு முழுமையான நீதியை வழங்குவதே எனது முயற்சி. அன்யாவை நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…