tamanna vijay varma [file image]
பாலிவுட் நடிகர் விஜய் வர்மா தமன்னாவை காதலிக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இவர் தமன்னாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளிவந்த பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். இவர் தற்போது பாலிவுட் மற்றும் கோலிவுட் என இரண்டிலும் கலக்கி வருகிறார்.
இப்படி தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் நடிகர் விஜய் வர்மா பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது தன்னுடைய கசப்பான சம்பவங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர் ” நான் பாலிவுட் சினிமாவுக்குள் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அப்படி இதுவரை பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததை போல கைவிட்டு போய் இருக்கிறது.
குறிப்பாக அந்த சமயமே எனக்கு ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் சில புகைப்படங்களை அனுப்புமாறு படக்குழு தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டார்கள். புகைப்படத்தை பார்த்துவிட்டு நீங்கள் தான் இந்த படத்திற்கு ஹீரோ என்பது போலவும் கூறினார்கள். பிறகு சில மாதங்களில் இருந்தே நான் அந்த படத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டேன்.
பிக் பாஸ் கொடுத்த வரவேற்பு! பாடகர் யுகேந்திரனுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்!
காரணம் அந்த படத்தின் இயக்குனருக்கு மூடநம்பிக்கைகள் அதிகம். ஜோசியம் பார்த்துவிட்டு நான் அந்த படத்தில் நடித்தால் செட் ஆகாது என்று ஜோசிய காரர் சொன்ன காரணத்தால் அந்த இயக்குனர் என்னை படத்தில் இருந்து அதிரடியாக நீக்கினார். பிறகு அந்த பட வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனவுடன் நான் மனது ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து வெளியே வரவே சில நாட்கள் ஆனது. ஆசையை காட்டி மோசம் செய்துவிட்டார்கள்.
நசீருதீன் ஷா தான் அந்த சமயம் எனக்கு ஆறுதலை தெரிவித்தார். சினிமாவில் சாதிக்கவேண்டும் என்றால் அவமானங்களை சந்திக்க வேண்டும் என்று கூறினார்.நான் எப்போதும் ஒரு நல்ல நடிகனாக மக்களிடம் பெயரை எடுக்கவேண்டும் என்று அன்று முடிவு செய்தேன்” எனவும் நடிகர் விஜய் வர்மா தெரிவித்துள்ளார். மேலும். நடிகர் விஜய் வர்மா தற்போது சூர்யாவின் 43வது திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…