Tamannaah: கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது எப்போதுமே கீழ்த்தரம் கிடையாது என நடிகை தமன்னா கூறியுள்ளார்.
நடிகை தமன்னாவுக்கு பட அண்மை காலமாக அந்த அளவுக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். இதனை தொடர்ந்து இப்பொழுது அரண்மனை 4 படத்திலும் கிளாமர் பாடலில் இடம்பெற்றுள்ளார்.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது எப்போதுமே கீழ்த்தரம் கிடையாது என நடிகை தமன்னா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் நடிகை தமன்னாவிடம் முன்பைவிட இப்போது அதிகமாக கிளாமர் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “காவாலா பாடலைப் பார்த்துவிட்டு சிலர் கீழ்த்தரமாக இருக்கிறது என்றெல்லாம் கூறினார்கள். கிளாமர் பாடல்கள் ஒருவகை கொண்டாட்டம் தான். அதை ரசிக்கப் பழக வேண்டுமே தவிர, இப்படி அவதூறு பரப்பக்கூடாது. பெண்களும் கிளாமர் குறித்தான பார்வையை மாற்ற வேண்டும்” என்றார்.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…