லேடி சூப்பர் ஸ்டாரின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் தமன்னா !
நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட் சினிமாவிலும் தற்போது நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கில் நடிகர் சீரஞ்சீவிக்கு ஜோடியாக “சாயிரா நரசிம்ம ரெட்டி “படத்தில் நடித்து வருகிறார். சினிமாத்துறையில் ஹீரோயின்களுக்கு நடுவே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை தமன்னா ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட இருக்கிறாராம். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் களமிறங்கி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.