உணவு அரசியலை பேசுகிறதா நயன்தாரா படம்? கவனம் ஈர்க்கும் அன்னபூரணி ட்ரைலர்.!
நடிகை நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ‘ஜவான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்னபூரணி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான இந்த படத்தை (அன்னபூரணி) அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார்.
அன்னபூரணி ட்ரைலர்
ட்ரைலரை வைத்து பார்க்கையில், பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா, இறைச்சி சமைப்பதில் உள்ள சவாலை சமாளித்து, இந்தியாவிலேயே ஒரு சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற தனது கனவை வளர்த்து வருகிறார். பின்னர், சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற நயன்தாராவின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே அன்னபூரணி படத்தின் கதை.
உணவு அரசியல்
இதில், எந்தக் கடவுளும் கறி சாப்பிட்டா தப்புன்னு சொன்னதில்லை என்று ஜெய் பேசும் வசனம் கவனம் ஈர்த்துள்ளது. அது மட்டும் இல்லாமல், “புடிச்சதா பண்ணா லட்சத்தில் ஒருத்தர் இல்ல லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம்” என்று நயன்தாரா சொல்லும் வசனும் கவனம் ஈர்த்துள்ளது.
நயன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இறைச்சியை சமைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் உணவு சார்ந்த அரசியல் அவ்வப்போது பேசுபொருளாகும். அதை உடைத்துப் பேசும் படமாக அன்னபூரணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அன்னபூரணி
அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜீ ஸ்டுடியோஸ், நாட் எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.