பேசுறாரு பேசுறாரு பேசிக்கிட்டே தான் இருக்காரு! இந்தியன் 2 வை விமர்சித்த எழுத்தாளர்!!

இந்தியன் 2 : கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. திரைப்பட விமர்சகர்கள் பலரும் படத்தினை விமர்சித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், சினிமா விமர்சகரும், எழுத்தாளருமான பரத்வாஜ் ரங்கன் சமீபத்தில் இந்தியன் 2 படத்தை விமர்சித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” வழக்கமாக ஷங்கர் படங்களில் ஆக்சன் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது. ஆனால், அந்த விஷயத்தில் இந்தியன் 2 என்னை ரொம்பவே ஏமாற்றிவிட்டது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் வருகிறார். பேசுறாரு பேசுறாரு பேசிக்கிட்டே தான் இருக்காரு ரொம்பவே எதிர்பார்த்து சென்றேன் ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. படத்தை பார்த்து ரொம்ப வருத்தப்பட்டேன்.
ஏற்கனவே இந்தியன் தாத்தாவை நாம் பல வருடங்கள் கழித்து பார்க்கிறோம். அது எப்படி இந்த வயதில் இப்படி இருக்கிறார் என்பதே எனக்கு சந்தேகமாக நம்ப முடியாத வகையில் இருக்கிறது. கமல் கிட்டதட்ட சைனீஸ் லுக்கில் இருக்கிறார். படம் என்னை ரொம்ப ஏமாற்றி விட்டது” எனவும் பரத்வாஜ் ரங்கன் தெரிவித்துள்ளார்.