பட வாய்ப்புகளே இல்லை! தாஜ்மஹால் பட நடிகையின் தற்போதைய நிலை?

மாடல் அழகியும், நடிகையுமான ரியா சென் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இவர் இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது இவருக்கு வயது 19- தான். அந்த அளவுக்கு சிறிய வயதிலே இவருக்கு தமிழ் ஹீரோயினாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. அந்த படத்தில் இவருடைய நடிப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.
தாஜ்மஹால் படத்தில் அவ்வளவு அழகாக நடித்திருப்பார். தாஜ்மஹால் படத்தை தொடர்ந்து தமிழில் அரசாட்சி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படங்களுக்கு பிறகு ரியா சென்ண்ணுக்கு தமிழில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இதன் காரணமாக அப்டியே ஹிந்திக்கு சென்றுவிட்டார்.
ஹிந்தி மட்டுமின்றி பெங்காலி, மலையாளம், ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் நடித்து கலக்கி இருக்கிறார். ஒரு காலத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகளே வரவில்லை என்பதால் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம். 42 வயதாகியும் இன்னும் கொஞ்சம் கூட அழகு குறையவில்லை நடிப்பு திறமையும் போகவில்லை.
அப்படி இருந்து தனக்கு என் பட வாய்ப்புகள் ஆரம்ப காலத்தை போல அமையவில்லை என மிகவும் வேதனையில் இருக்கிறாராம். இவருடைய தற்போது நிலை இப்படி மாறிவிட்டதாம். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு அதற்கான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அப்படியாவது தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதால் தாராளமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
அது மட்டுமின்றி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அப்படியே வெப் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது ஹிந்தியில் ரியா சென் டெத் தாளே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவும் இல்லை நடிக்க கமிட் ஆகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024