10 வருடமாக அவருடன் டேட்டிங்! மனம் திறந்த நடிகை டாப்ஸி!
தமிழ் சினிமாவில் காஞ்சனா 2, ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பண்ணு. இவர் தற்போது தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் ஹிந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை டாப்ஸி தான் டேட்டிங் செய்து வரும் நபர் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சினிமாவிற்கு நுழைந்த ஆரம்ப காலத்தில் இருந்தே ஒருவருடன் டேட்டிங் செய்து வருகிறேன். அவருடைய பெயர் மதிஸ். நாங்கள் பழகிய நாளில் இருந்து இப்போது வரை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நீங்கள் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என்ன? சமந்தா சொன்ன பதில்!
அவருடன் பழக்கம் ஏற்பட்ட தினத்தில் இருந்து இப்போதுவரை என்னுடைய மனதை தொட்டு சொல்கிறேன் அவரை விட்டு விட்டு வேறொருவருடன் உறவில் ஈடுபடவேண்டும் என்று நான் நினைத்தது கூட இல்லை. அந்த அளவிற்கு எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். கிட்டத்தட்ட நானும் அவரும் ஒரு 10 வருடங்களாகவே டேட்டிங் செய்து வருகிறோம்.
தனிப்பட்ட முறையில் காதல் மற்றும் திருமணம் பற்றி கருத்துக்கள் இருக்கிறது. எனவே, நான் இது நாள் வரை அதுக்காக தான் திருமணம் பற்றியோ காதல் பற்றியோ பேசியது இல்லை. இருந்தாலும் நான் டேட்டிங் செய்யும் நபருடன் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறினார். மேலும் பேசிய அவர் ” நான் சினிமா துறையில் நுழைந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் என்னுடைய ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.