இறுதி சுற்று இயக்குனருடன் இணையும் சூர்யா-விஜய் தேவரகொண்டா!
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே (NGK) எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து சூர்யா, இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கோங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். விஜய் தேவரகொண்டா தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். இருவரும் அந்தந்த படங்களின் வேலைகள் முடிந்த பிறகு இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU