100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த சூர்யாவின் ‘அன்பே பேரன்பே’.!
சூர்யாவின் என்.ஜி.கே. படத்திலுள்ள ‘அன்பே பேரன்பே’ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
கடந்தாண்டு செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் என்.ஜி.கே.இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பாலா சிங், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது.அதிலும் ‘அன்பே பேரன்பே’ எனும் பாடல் தான் ரசிகர்களின் ஃபேவரட் என்று கூறலாம்.
தற்போது என்.ஜி.கே. படத்திலுள்ள ‘அன்பே பேரன்பே’ பாடல் யூடுயூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.இதனை சூர்யா ரசிகர்கள் #100MViewsForAnbaePeranbae என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
A melody so beautiful that wouldn’t leave you for years to come! ♥️
Celebrating the massive #100MViewsForAnbaePeranbae ????
➡️ https://t.co/YEJjHX0YUm@Suriya_offl @selvaraghavan @thisisysr @DreamWarriorpic @RelianceEnt @Rakulpreet @sidsriram @shreyaghoshal #Umadevi #NGK pic.twitter.com/cNRLpLrcrF
— Sony Music South (@SonyMusicSouth) February 10, 2021