நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் “சூர்யா 41” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கப்படவுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, சிறுத்தை, வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாவே தகவல்கள் பரவி கொண்டே தான் வருகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரபல தெலுங்கு நடிகையான பூஜாஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஆனால் தமிழில் இவருக்கு அவ்வளவு பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவிற்கு சென்று பல டாப் நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து பூஜாஹெக்டே மீண்டும் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் வருகிறார். சூர்யாவிற்கும் அவருக்கு ஜோடி நன்றாக தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…