சூர்யா அப்பவே சொன்னார்.! அப்போ புரியல..இப்போ தான் புரியுது…உதயநிதி ஸ்டாலின் வருத்தம்.!

Udhayanidhi Stalin - suriya

7ஆம் அறிவு படத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான காட்சியை சூர்யா நீக்கச் சொன்னார், ஆனால் அதை நான் செய்யவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “ஏழாம் அறிவு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் அப்போவே பிரமாண்டமாக தயாரித்திருந்தார். படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்க சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் சூரியாவுக்கு மிக்பெரிய சினிமா பாதையை அமைத்து கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தை 11 வருடங்கள் கழித்து படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் நினைவு கூர்ந்து பேசியிருக்கிறார். அதாவது, அப்போது எனக்கு அரசியல் புரிதல் இல்லை என்றும், சூர்யாவுக்கு அந்த புரிதல் இருந்தது என்று கூறினார்.

udhayanidhi stalin suriya
udhayanidhi stalin suriya [Image source : postsen]

அதாவது, படத்தின் ஒரு காட்சியில் ஸ்ருதிஹாசன் பேசும் ஒரு காட்சியில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு வரியை பேசிருப்பார். நான் தயாரித்த படத்தில் இடஒதுக்கீட்டை விமர்சிக்கும் வரி உள்ளது. அப்போது எனக்கு இருந்த அரசியல் புரிதலுடன் அதை அப்படியே விட்டுவிட்டேன். ஆனால், அதை படத்தில் வைத்ததற்காக ஏ.ஆர்.முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அது அவரது அரசியல் புரிதலும், எழுத்தும் எண்ணங்களும் வேறு… ஆனால் என் படத்தில் அது இருக்கக் கூடாது என்று வருத்தம் தெரிவித்தார்.

udhayanidhi stalin murgadass
udhayanidhi stalin murgadass [Image source : Galatta]

அப்போது, அந்த காட்சியை படமாக்கும் போது சூர்யாவுக்கு கூட தெரியாது. டப்பிங் பேசும் போது கூட சூர்யா இல்லை. ஆனால், படத்தை வெளியிடுவதற்கு முன் படத்தை பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் பண்ணி, இப்படி இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு காட்சி அமைந்திருக்கு இது வேண்டாம்…நீக்கிடுங்க என்றார். நான் விடுங்க பாஸ் சும்மா ரெண்டு லைன் தானே அப்படினு சாதாரணமாக விட்டுவிட்டேன். அப்போ எனக்கு அரசியல் புரிதல் இல்லை…

Udhayanidhi Stalin -suriya
Udhayanidhi Stalin -suriya [Image source : film]

அப்போ என்னிடம் சூர்யா அதை நீக்க சொன்னார்… அதுதான் சூர்யாவின் அரசியல் புரிதல். சூர்யா அப்பவே சொன்னார், ஆனால் எனக்கு அப்போ புரியல…இப்போ தான் புரியுது என்று வருத்தம் தெரிவித்ததோடு, இப்போது அதை நினைக்கும் போது, அந்த வசனத்தை நான் தயாரித்த படத்தில் அனுமதித்திருக்கக் கூடாது என்று தோன்றுகிறது என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்