நடிகர் சூர்யா இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதை சன்மியூசிக் சேனலின் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் கிண்டல் செய்து பேசினர். சூர்யாவின் உயரத்தைக் கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து சூர்யா ரசிகர்கள் சன் டி.வி. அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சன் நெட்ஒர்க் நிறுவனத் தலைவருக்கு நடிகர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தனிப்பட்ட ஒருவரைப் பற்றி அநாகரிகமான விமர்சனங்களை வெளியிடுவது பொருத்தமானது இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற காட்சிகள் இனி ஒளிபரப்பாகாது என்ற உத்தரவாதத்தை அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரச்சினை விவரம் :
இதற்கு முன் , சன் மியூசிக் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்ததாக புகார் தெரிவித்து சன் டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சன் மியூசிக்கின் ‘ஃப்ராங்கா சொல்லட்டா’ என்ற நிகழ்ச்சியில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவும், அமிதாப்பச்சனும் இணைந்து நடிக்கும் படம் தொடர்பான விவரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அப்போது சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா, அனுஷ்காவுடன் ஹீல்ஸ் போட்டு நடித்ததாகவும், இந்நிலையில் அமிதாபச்சனுடன் நடித்தால் நாற்காலி போட்டுத்தான் நடிக்க வேண்டும் என்றும் தொகுப்பாளர்கள் நிவேதிதா, சங்கீதா ஆகியோர் பேசியதாகக் கூறப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து சூர்யா ரசிகர்கள் சன் டி.வி. அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சன் மியூசிக் நிர்வாகிகளும், தொகுப்பாளர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பதிவில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி தரத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டாம் என்றும், நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுமாறும் தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்…..
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…