ஆசிரியர்களே இல்லாமல் படித்து வரும் 30 சதவீத மாணவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்?! சூர்யா ஆதங்கம்!
நடிகர் சூர்யா குடும்பம் நடிப்பது தவிர்த்து தங்களது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அறக்கட்டளை பங்களிப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சூர்யா, ‘ தமிழ்நாட்டில் உள்ள 30 சதவீத அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்து வருகின்றனர். அவர்கள் எப்படி நீட் தேர்விற்கு தயார் ஆவார்கள். ‘ என கேள்வி எழுப்பினார். மேலும், ‘ அரசு பள்ளிகளை மூடினால், பல கிராமப்புறங்களின் மாணவர்கள் கல்வி வெகுவாக பாதிக்கப்படும்.’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.