சூர்யா மார்க்கெட் எங்கயோ போகப்போகுது! அடுத்த பட இயக்குனர் யாரு தெரியுமா?

சூர்யா : நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான போஸ்ட் ப்ரோடோக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தினை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக இய்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சூர்யா யாருடைய இயக்கத்தில் படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது அதற்கான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, சூர்யா அடுத்ததாக மஃப்டி, பைரதி ரணகள் படத்தினை இயக்கிய இயக்குனர் நர்த்தன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் சூர்யாவை வைத்து இயக்கும் அந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடெக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் கல்கி படத்தினை வாங்கி விநியோகம் செய்தது. எனவே. இவ்வளவு பெரிய நிறுவனம் சூர்யாவை வைத்து ஒரு படத்தினை தயாரிக்கிறது என்றால் கண்டிப்பாக அந்த படம் பிரமாண்டமாக இருக்கும் என்பதில் பஞ்சமே இல்லை.
அது மட்டுமின்றி, இயக்குனர் நர்த்தன் இயக்கிய மஃப்டி படம் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகி தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. எனவே, அவர் சூர்யாவை வைத்து ஒரு படத்தினை இயக்குவதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. கண்டிப்பாக அவருடைய இயக்கத்தில் சூர்யா நடித்தால் சூர்யா மார்க்கெட் எங்கயோ செல்ல போகிறது என்று கூறிவருகிறார்கள் நெட்டிசன்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025