actor surya political [File Image]
Actor Surya : நடிகர் சூர்யா தமிழ்நாடு முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவெடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக திகழும், நடிகர் விஜய் இப்பொது கமிட்டாகி நடித்து வரும் ஓரிரு படங்களை தொடர்ந்து, அரசியலில் களம் காண்பதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நடிகர் சூர்யா இதுவரை அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தற்போது தமிழகம் முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த நடிகர் சூர்யா முடிவெடுத்துள்ளாராம்.
சூர்யா நற்பணி இயக்கம் 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஆம், இப்பொழுது 60 மாவட்டங்களிலும் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் எதிர்கால திட்டமிடலை முன்வைத்து இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக, சூர்யா நற்பணி இயக்கம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறதாம்.
அந்த வகையில், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் , புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில், வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும், எதிர்கால திட்டமிடலை முன்வைத்தும் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் விஜய்யை தொடர்ந்து, சூர்யாவும் அரசியலுக்கு அடித்தளம் இடுகிறாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏதெனும் வெளியாகவில்லை. ஆனால், இது குறித்து கிசுகிசுப்புகள் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கிடையில், நடிகர் விஷாலும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…