வயநாடு நிலச்சரிவு: ரூ.50 லட்சம் வழங்கிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி.!

கேரளா : கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட சில நடிகர்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நாடடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் நிதியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். மேலும், நடிகை ராஷ்மிகா ரூ.10 லட்சம் வழங்கினார். நேற்றைய தினம் (ஜூலை 31) சியான் விக்ரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சர் பேரிடர் நிதிக்கு ரூ.20 லட்சத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மோகன்லால், மம்முட்டி, மஞ்சு வாரியர், ஆசிப் அலி, டோவினோ தாமஸ், நிகிலா விமல், பாசில் ஜோசப் மற்றும் மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025