ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் சூர்யா! அது என்ன சர்ப்ரைஸ் தெரியுமா ?
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் என்.ஜி.கே. இவர்களது இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனையடுத்து, ஏப்ரல் 29-ம் தேதி இப்படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் இப்படத்தின் டிரைலர் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அறிவிக்கப்பட்டதால், அவர்களுக்கு இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.