தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் “ராக்கெட்ரி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். மூத்த விஞ்ஞானியும், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையப் பொறியியல் வல்லுநருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் தமிழ் சூர்யாவும், இந்தியில்ஷாருக்கானும் சம்பளமே வாங்காமல் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். இன்னும் சில நாள்களில் படம் வெளியாக இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த நிலையில், “ராக்கெட்ரி” படத்தின் படப்பிடிப்பின் போது, சூர்யா தனது ரோலில் நடிப்பதற்காக செட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நடிகர் மாதவனுடன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனும் இருந்துள்ளார்.
இரண்டு பெரும் ஒரே மாதிரி இருந்ததால், யார் மாதவன் என்று புரியாமல் சூர்யா ஒரு நிமிடம் அதிர்ச்சியாக நின்றுள்ளார். இதனை பார்த்த மாதவன் தான் என்பதை அவரே அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அச்சு அசலாக நம்பி நாராயணனாக மாறி இருந்த மாதவனை பார்த்து சூர்யா தலையில் கை வைத்து அதிர்ச்சியான அந்த வீடியோவை மாதவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…