68 கோடிக்கு சொகுசு ப்ளாட் வாங்கிய சூர்யா.! வெளியான சீக்ரெட் தகவல்.!
நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பே மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்று பலருக்கும் தெரியும். அவருக்கு அங்கு ப்ளாட் இருக்கும் தகவல்களும் நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். இதில் ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், சூர்யா தற்போது ஆடம்பரமான டுப்லெஸ் ப்ளாட் ஒன்றை மும்பையில் வாங்கியுள்ளாராம்.
ஏற்கனவே அவருக்கு சென்னையில் இருக்கும் வீடு அரண்மனை போல பிரமாண்டமாக தான் இருக்கும். ஆனாலும் சில காரணங்களால் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பைக்கு சென்றுவிட்டார்.
இதனையடுத்து, சூர்யா தற்போது மும்பையில் வாங்கியுள்ள அந்த ஆடம்பரமான ப்ளாட் கிட்டத்தட்ட 68 கோடி எனவும் கூறப்படுகிறது. எனவே, 68 கோடியில் சூர்யா டுப்லெஸ் ப்ளாட் ஒன்றை வாங்கிய செய்திதான் தற்போது பெரிதளவில் தலைப்பு செய்தியாக இருக்கிறது.
மேலும், நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.