அண்ணாத்த ரிசல்ட் – இரட்டை வேடம் – சூர்யா படம்.! சிவா இயக்கத்தில் நடைபெறுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் நகரத்து பின்னணியில் உருவாக உள்ளதாம். அதில், சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்த வருட தீபாவளி தின திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இந்த திரைப்படம் எந்த குறையும் வைக்கவில்லை.
இந்த திரைப்படம் விமர்சனங்கள் பெற்ற நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பாரா என்கிற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. ஏனென்றால், சூர்யா அடுத்ததாக பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆதலால், சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. என்னதான் எதிர்மறை விமர்சனங்களை அண்ணாத்த திரைபடம் பெற்றாலும், வசூலில் குறைவைக்கவில்லை. குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு தற்போதும் வருகின்றனர். அதனால், சூர்யா – சிறுத்தை சிவா திரைப்படத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. கண்டிப்பாக திரைப்படம் நடக்கும் என சினிமாவாசிகள் கூறுகின்றனர்.
இந்த திரைப்படம் நகரத்து பின்னணியில் எடுக்கப்பட உள்ளது. இதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். சிறுத்தை சிவா பாணியில் செண்டிமெண்ட் ஆக்சன் படமாக உருவாக உள்ளதாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025