லியோவை மிஞ்சப்போகும் ‘சூர்யா 42’ ப்ரோமோ.! லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!
ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களும் சூர்யா நடித்து வரும் (SURIYA42) படத்தின் அப்டேட்காக தான் ஆவலுடன் காத்துள்ளனர். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், இப்படம் குறித்த தகவல் அவ்வபோது இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், “சூர்யா 42” திரைப்படத்தின் தலைப்பு ப்ரோமோவுடன் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாம். ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் அந்த ப்ரோமோ இதற்கு முன்பு விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் ப்ரோமோவை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.
சூர்யா 42 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் , தற்போது படத்தை அதற்கு முன்னதாகவே கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும் “சூர்யா 42” படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக கடைசியாக படத்தின் ஆடியோ உரிமையை பெரிய நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கியதாகவும், சூர்யா சினிமா கேரியரில் இதுவரை வெளியான படங்களிலே அதிகம் விலை கொடுத்து ஆடியோ உரிமையை விற்பனை ஆன திரைப்படம் இந்த திரைப்படம் தான் என்ற சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.