நடிகர்களை மிஞ்சிட்டீங்க…சூர்யா படத்துக்கு வெறித்தமனாக தயாராகும் நடிகை…வைரலாகும் வீடியோ.!!

Disha Patani

நடிகர் திஷா பதானி தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

Disha Patani Kanguva
Disha Patani Kanguva [Image Source : Twitter ]

இந்நிலையில் வழக்கமாக எப்போதும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் திஷா பதானி தற்பொழுது சண்டை பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  வீடியோவில் நபர் ஒருவருடன் வெறித்தனமாக சண்டை பயிற்சியில் திஷா பதானி ஈடுபட்டு வருகிறார்.

Disha Patani
Disha Patani [Image Source : Twitter /@DishPatani ]

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்  பலரும் அடடா நடிகர்களை மிஞ்சிட்டீங்க எனவும்கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் சூர்யா படத்துக்காக தான் இப்படி தயாராகிறீர்களா..?  எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், திஷா பதானி கங்குவா  படத்தை தொடர்ந்து Project K  எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்