Categories: சினிமா

விஜயகாந்த் உடல்நிலை…விஜய்க்கு முன் முந்திய சூர்யா.! கோடானகோடி வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்..

Published by
கெளதம்

அண்ணன் விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் என சூர்யா ட்வீட் செய்திருக்கிறார். ஆனால், தளபதி விஜய் ஏன் இன்னும் விஜயகாந்த் குறித்து நலம் விசாரிக்கவில்லை என்று கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியானது.

அதில், அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரது குடும்பத்தினர் சார்பாக, அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார் என்றும், யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும்  விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  அதுபோல், சில திரையுலக பிரபலங்களும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை – மருத்துவமனை அறிக்கை

அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் நடிகர் விஜயகாந்த், நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று சூர்யா விருப்பம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாக பங்கேற்கிறேன். கோடான கோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும். அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்று நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரையுமே கூறலாம். இப்படி, இருக்கையில், இவர்களது ஆரம்ப கட்ட சினிமா கலக்கட்டங்களில் அவர்கள் சந்தித்த அவமானங்கள் பல உண்டு. எஸ். ஏ. சந்திரசேகர் மூலமாக விஜய்யும், சிவகுமார் மூலமாக சூர்யாவும் சினிமாக்குள் நுழைந்தன, அப்போது இவர்களுக்கு ஒரு வகையில், விஜயகாந்த் அவர்கள் கைகொடுத்தார் என்றே சொல்லலாம்.

கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார் – வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்..!

ஆம், எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘பெரியண்ணா’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுபோல், விஜயகாந்த் நடிப்பில் வெளியான செந்தூரப் பாண்டி படத்தில் விஜய்யை நடிப்பதற்கு ஓகே சொல்லிருப்பார். இவ்வாறு, விஜய்- சூர்யா ஆரம்ப கால சினிமா காலகட்டங்களில் தனது படங்களில் இவர்களை தோள் தட்டி கொடுத்தவர்.

இப்படி இருக்கையில், அந்த மூத்த நடிகரின் உடல்நலம் விசாரிப்பது தானே நல்ல நடிகருக்கு அழகு. அந்த விமர்சனத்துக்கு இடம் கொடுக்காமல், நடிகர் சூர்யா விஜய்க்கு முன்னதாகவே, கேப்டன் விஜயகாந்தின் உடலம் குறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

PBKS vs RR : பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த ராஜஸ்தான்! வெற்றிக்கு 206 ரன்கள் டார்கெட்!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

36 minutes ago

“சினிமாவில் அவர் CM ஆகலாம்., ஆனால் நிஜத்தில்.?” மீண்டும் விஜயை சீண்டிய பவர்ஸ்டார்!

சென்னை  : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…

1 hour ago

CSK vs DC : மீண்டும் சொதப்பல்.. மீண்டும் தோல்வி! டெல்லியிடம் வீழ்ந்த சென்னை!

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…

3 hours ago

விசாரணை கைதி மரணம்., தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…

3 hours ago

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடங்குவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

சென்னை :  மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…

4 hours ago

CSK vs DC : பந்துவீச்சில் கட்டுப்படுத்திய சென்னை., நிலைத்து ஆடிய டெல்லி! 184 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…

5 hours ago