கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க? ஆஸ்கர் ரேஸில் களமிறங்கிய சூர்யாவின் கங்குவா.!

97வது ஆஸ்கர் விருதுகள் 2025 சிறந்த படத்திற்கான விருது பிரிவின் தகுதிபட்டியலில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நுழைந்துள்ளது.

Kanguva

சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் “கங்குவா” திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும் அந்த அளவிற்கு பெரியதாக சாதனை படைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ரசிகர்களின் பெரிய ஆவலுக்கு இப்படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இந்த நிலையில், 97-வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான விருது, பிரிவின் தகுதிப்பட்டியலில் சூர்யாவின் ‘கங்குவா’ இடம்பிடித்துள்ளது. இந்த தகவலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 323 படங்களில், 207 திரைப்படங்கள் மட்டுமே சிறந்த படப் பிரிவில் பரிசீலிக்கத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான நேரத்தில் கங்குவா படத்தை வச்சி செய்த நெட்டிசன்களுக்கு இது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி தான்.

ஒரு பக்கம், இந்த செய்தி இணையத்தை ஸ்தம்பிக்க வைக்க, சூர்யா ரசிகர்கள் “இப்போ சண்டைக்கு வாடா” என சந்தோஷத்தில் கொண்டாடி வருகிறார்கள். ஆஸ்கர் ரேஸில் கங்குவா மட்டுமல்ல, மேலும் சில இந்திய படங்களும் பட்டியலில் உள்ளன.

அந்த வரிசையில் பிரித்விராஜ் சுகுமாரனின் ஆடுஜீவிதம் (GOAT Life), ஸ்வதந்த்ரியா வீர் சாவர்க்கர் மற்றும் சந்தோஷ் ஆகிய படங்களாகும். ஆஸ்கர் வேட்புமனு நாளை தொடங்கி ஜனவரி 12 அன்று முடிவடைகிறது. அகாடமி இறுதிப் பரிந்துரைகளை ஜனவரி 17ம் தேதி அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்